எண்ணம் போல் வாழ்க்கை கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க..!

 
எண்ணம் போல் வாழ்க்கை

எண்ணம் போல் வாழ்க்கை

எண்ணம் போல் வாழ்க்கை இந்தச் சொல் நாம் எல்லோருக்கும் பரிச்சயம் ஆனது தான். எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்கிற விவேகானந்தர்.


 பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே என்கிறான் கண்ணதாசன். எண்ணிய எண்ணியாங்கு என்றார் திருவள்ளுவர்.


என் உயிர் எப்படி எண்ணின அவ்யருக்கு அப்படி அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி என்றார் வள்ளல் பெருமான்.


 பாமரன் கூட பயன்படுத்தும் வார்த்தைதான் எண்ணம் போல் வாழ்க்கை. இந்த உலகத்தில் மிகக் குறைந்த அளவே செல்வந்தர்களாக இருக்கிறார்கள்.


மிகச் சிலர் மட்டும். சிலர் மட்டுமே எந்த பின்புலமும் இல்லாமல் மிகச்சிறந்த விஞ்ஞானியாக இருக்கிறார்கள்.


 ஒரு விஞ்ஞானியே அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருக்கிறார். பல அற்புதமான சாதனைகளை சிலர் மட்டுமே செய்திருக்கிறார்கள்.


இவர்கள் எல்லோரும் அறிந்த ஒரே மாபெரும் ரகசியம் எண்ணம்போல் வாழ்க்கை.


 எண்ணங்களுக்கு சக்தி உண்டு இப்படி ஒரு கருவி இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு விஞ்ஞானியின் எண்ணம் தான் நாம் பயன்படுத்தும் பல கண்டுபிடிப்புகள்.


 அதேபோல இப்படி செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஒரு மனிதனின் எண்ணங்கள் தான் அவனை செல்வ செழிப்புடன் வாழ வைக்கிறது.


எண்ணம் போல் வாழ்க்கை சிந்தித்து பாருங்க


ஏன் நீங்களே கூட சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் என்ன அடைந்த இலக்குகளை. முக்கியமான ஒன்று என்னத்தால் நன்மை மட்டும் அல்ல நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் பிரச்சனைகளுக்கும் காரணமும் எண்ணங்கள் தான்.


 பாரதியின் பெரிதினும் பெரிதுகள் என்ற வார்த்தையை போல பெரிதாக ஆசைப்படுங்கள்.

பத்து ரூபாய்க்கானதும் உங்கள் எண்ணம் தான் 10 கோடியுடன் வாழவும் உங்கள் எண்ணங்கள் தான். எதிர்மறையாக உங்கள் எண்ணங்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை எதிர்மறையாக மாறிவிடும். வாழ்க்கையில் மாற்றத்தை விரும்பும் நீங்கள் எதை மாற்றினாலும் மாற்றம் வராது. எண்ணம் போல் தான் உயர்வு என்ற புரிதலை உங்களை உயர்த்தும். அதைப்போல உங்களுக்கு வேண்டிய வாழ்க்கையை எண்ணிவிட்டு பிறரை பற்றி தவறாக எண்ணுவது. ஏற்றத்தாழ்வு பார்ப்பது அந்த எண்ணங்கள் உங்களை அதே நிலைக்கு வர வைத்து விடும். பலரும் நாம் செல்வ செழிப்புக்கு தான் இந்த எண்ணங்கள் என்று எண்ணுகிறார்கள். உங்களுடைய ஒவ்வொரு எண்ணங்களையும் உங்களுடைய வாழ்வில் அனுபவிப்பீர்கள். உங்கள் எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். எல்லோரையும் உயர்வாக எண்ண வேண்டும். சிலர் பெருமையாக கூறுவது உண்டு. 5 வருடங்களுக்கு முன் ஒரு ஹெல்த்தின்சாரன்ஸ் எடுத்தேன். இன்று ஆபரேஷன் செய்ய உதவியது என்று. இது கூட எண்ணம் போல் தான் நடந்துள்ளது. வரும் காலத்தில் நோய் வரும் என்ற எண்ணமே அவற்றை ஏற்படுத்தி விடும். இப்படி ஆரோக்கியமும், செல்வ செழிக்கும், குடும்ப ஒற்றுமை, காதல் எல்லாம் நேர்மறையான எண்ணங்களாக இருந்தால் நல்லதே நடக்கும். நாம் எல்லோரும் மகிழ்வுடன் வாழ்கிறோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கிறது. இந்த உலகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. எல்லோரும் எல்லோரையும் நேசிக்கிறார்கள். எண்ணம்போல் வாழ்க்கை உயர்ந்த எண்ணங்களை எண்ணங்கள் உயர்வாக வாழுங்கள். மகிழ்வுடன் வாழுங்கள்